செய்திகள் :

அண்ணல் அம்பேத்கர் , முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

post image

தமிழ் வளர்ச்சித் துறையின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி , ஜவகர்லால் நேரு , அண்ணல் அம்பேத்கர் , தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா , முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தி பரிசு , பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது . 


அதன்படி , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 04.08.2023 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் , எதிர்வரும் 11.08.2023 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் 


தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டி காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது . 


மேலும் , பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்பேட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ .5,000 மும் , இரண்டாம் பரிசாக ரூ .3,000 மும் , மூன்றாம் பரிசாக ரூ .2,000 மும் , மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் . மேலும் , அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசு தொகை ரூ .2,000 வீதமும் என மொத்தம் ரூ .24,000 க்கான பரிசுகள் வழங்கப்படவுள்ளது . 


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி , கல்லூரிகளில் பயிலும் மாணவ , மாணவியர்கள் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தெரிவித்துள்ளார் .