அனைத்து வருவாய் கிராமங்களில் பிஎம் - கிஸான் திட்டத்தில் பணம் பெறுவதற்கு e - kyc பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் , வருவாய் கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பிஎம் - கிஸான் ( PM - Kissan ) திட்டத்தில் பணம் பெறுவதற்கு e - kyc பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் நாளை 24.06.2023 அன்று காலை 9 மணி முதல் சிறப்பு பதிவு செய்யும் முகாம் நடைபெறவுள்ளது . இம்முகாமில் தகுதியுள்ள விவசாயிகள் 14 வது தவனை பணம் பெறுவதற்கு e - kyc பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது .
மேலும் விவசாயிகள் , பிஎம் - கிஸான் ( PM - Kissan ) திட்டத்தில் பணம் பெறுவது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் , உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களை நேரில் சென்று சந்தித்து e - kyc பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் தெரிவித்துள்ளார் .















