செய்திகள் :

அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை எதிர்வரும் 24.07.2023 க்குள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப , அவர்கள் தகவல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவக கூட்டரங்கில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் சென்னை ஓய்வூதிய இயக்குநர் அவர்களால் எதிர்வரும் 10.08.2023 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் நடைபெறவுள்ளது . 


மேலும் , கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை இரண்டு பிரதிகளில் " ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு ” என குறிப்பிட்டு 24.07.2023 க்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் .