அறிஞர் அண்ணா நெடுந்தூர ஒட்டப்போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் அருகில், மாவட்ட
விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் சார்பில், அறிஞர் அண்ணா நெடுந்தூர
ஒட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இப, அவர்கள், சங்கராபுரம்
சட்டமன்ற உறுப்பினர் திரு.தா.உதயசூரியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந.மோகன்ராஜ்
ஆகியோர் முன்னிலையில் (07.10.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர்.
அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையிலும், பொதுமக்கள் மற்றும்
மாணவர்களுக்கு உடற்தகுதியைப் பேணுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும்,
உடற்தகுதி கலாச்சாரத்தை புகுத்துவதற்காகவும் மாவட்ட தலைமை இடங்களில் அறிஞர் அண்ணா:
நெடுந்தூர ஒட்டப்போட்டி நடத்திட அறிவுறுத்தினார்கள். அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி
மாவட்டத்தில், 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஆண்களுக்கு 8 கி.மீ.
தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும், 25 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் ஆண்களுக்கு
10 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் ஆகிய 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும்
பெண்களுக்கு நடத்தப்பட்டது.
இப்போட்டிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து துவங்கி
கச்சிராப்பாளையம் போகும் சாலை வழியாக சென்று ஏர்வாய்ப்பட்டினம் வரை நடைபெற்றது. இதில்
வெற்றி பெற்ற ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக முதல் பரிசாக ரூ5,000/-மும், இரண்டாம்
பரிசாக ரூ.3,000 மும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/“மும் மற்றும் ஆறுதல் பரிசாக 4 முதல் 10
இடங்களைப் பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா ரூ.1,000/5 வீதம் 28 நபர்களுக்கும்
வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து
கொண்டனர்.
இப்போட்டியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.து.சுரேஷ், மாவட்ட
விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.ஆர்.ஜெயக்குமாரி, மாவட்ட சமூக நல
அலுவலர் செல்வி.எஸ்.தீபிகா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்:
திரு.பா.ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி, மாவட்ட
உடற்கல்வி ஆய்வாளர், உடற்கல்வி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும்
மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.















