ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் தொகுப்பூதியத்தின்கீழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணாக்கர்களின் நலன்கருதி தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்ய ஆதிதிராவிடர் நல இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார் .
அதன்படி , பட்டதாரி ஆசிரியர் நிலையில் ஆங்கிலம் -2 , கணிதம் -1 , அறிவியல் -1 , சமூக அறிவியல் -1 என 5 காலிப்பணியிடங்களும் , இடைநிலை ஆசிரியர் நிலையில் 22 காலிப்பணியிடங்களும் உள்ளன . பட்டதாரி ஆசிரியர் நிலையில் ரூ .15,000 மும் , இடைநிலை ஆசிரியர் நிலையில் ரூ . 12,000 மும் மாத ஊதியம் வழங்கப்டும் .
வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று , இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் அல்லது வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ( TET ) , இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பட்டியலினத்தவர்க்கும் , பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் .
விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் 05.09.2023 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் . கால நிர்ணயத்திற்கு பின்பு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் .















