உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் இலவச திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்,
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று (30.10.2023)
இலவச திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்.
திருக்குறளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, 1,330 திருக்குறளை
மணப்பாடமாக கூறும் மாணவர்களுக்கு 2000 ஆண்டு முதல் தமிழக அரசு
பரிசுத்தொகையும், சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது. உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம்
என்ற அமைப்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 ஆண்டுகளுக்கு 2,000
திருக்குறள் புத்தகங்களை விலையில்லாமல் வழங்க முன்வந்துள்ளது. அதன்படி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உலகத்
திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகங்களை மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இலவச திருக்குறள் புத்தகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கள்ளக்குறிச்சி, அரசு
ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கள்ளக்குறிச்சி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சின்னசேலம்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சின்னசேலம்,பெரிய சிறுவங்கூர் மேல்நிலைப்பள்ளி,
பெரிய றுவங்க மாதிரி பள்ளி, தாகம்தீர்த்தாபுரம் மேல்நிலைப்பள்ளி, பினார்பாளையம்
மேல்நிலைப்பள்ளி, அரங்கநாதபுரம் உயர்நிலைப்பள்ளி, மூரார்பாது மகளிர்
உயர்நிலைப்பள்ளி, சேஷசமுத்திரம் உயர்நிலைப்பள்ளி, சித்தால் அரசு மாதிரிப் பள்ளி,
சித்தேரிப்பட்டு அரசு மேல்நலைப்பள்ளி, ஏமப்போர் உயர்நிலைப்பள்ளி என மொத்தம் 15
அரசு பள்ளிகளுக்கு 750 திருக்குறள் புத்தகம் ரூ.7,000 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன், முன்னாள்
இணை இயக்குநர் (நலப்பணிகள்) திரு.வே.உதயகுமார், பாரதியார் தமிழ்ச்சங்கம் தலைவர்
தியாகதுருகம் திரு.பாவலர்.இரா.துரைமுருகன், சின்னசேலம் திருக்குறள் பேரவை தலைவர்
திரு.மு.பி.பாசுகரன் (எ) பூங்குன்றன், முன்னாள் துணை ஆட்சியர் திரு.தி.கிருட்டிணசாமி,
மாவட்டத் தொடர்பாளர் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் புலவர்.அய்யா.மோகன்,
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.















