செய்திகள் :

ஒருங்கிணைந்த சேவை மைய காவலர் / ஓட்டுநர் -1 காலிபணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மைய காவலர் / ஓட்டுநர் -1 


காலிபணியிடத்திற்கான 


விண்ணப்பங்கள் 


வரவேற்கப்படுகிறது . 


காவலர் / ஓட்டுநர் 1 காலிபணியிடத்திற்கு 25 வயது முதல் 40 வரை உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் . இப்பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் , 2 வருட பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . இதற்கான மாத ஊதியம் ரூ .10,000 / வழங்கப்படும் . இப்பணி முற்றிலும் தற்காலிகமானது மற்றும் பணியாளர் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார் ( பகல் , இரவு ) . இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க உரிய விண்ணப்பப் படிவம் கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை நிரப்பி உரிய சான்றிதழ்களுடன் கள்ளக்குறிச்சி வ.உ.சி நகர் , 5 - வது தெருவில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 28.07.2023 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் .