செய்திகள் :

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு முதற்கட்டமாக நடைபெற்ற முகாம்களில் 80 சதவீத விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தகவல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பப்பதிவு முகாம்கள் ஜீலை 24 - ஆம் தேதி தொடங்கப்பட்டு 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது . கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 766 நியாயவிலை கடைகளில் 4,34,663 குடும்ப அட்டைகள் உள்ளன . இதில் , முதற்கட்டமாக 580 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 2,75,356 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜீலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெற்ற முகாம்களில் 80 % விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது . 


மேலும் , இரண்டாம் கட்டமாக கள்ளக்குறிச்சி வட்டத்தில் 41 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 36,166 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்களும் , சின்னசேலம் வட்டத்தில் 39 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 31,478 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்களும் , சங்கராபுரம் வட்டத்தில் 52 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 46,690 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்களும் , கல்வராயன்மலை வட்டத்தில் 11 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 6,901 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்களும் , உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 18 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 16,787 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்களும் , திருக்கோவிலூர் வட்டத்தில் 25 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 21,285 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 186 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 1,59,307 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் 5 - ஆம் தேதி முதல் 16 - ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறும் முகாம்கள் நடைபெற்று வருகிறது . 


இந்த திட்டம் தொடர்பான விவரங்கள் , புகார்கள் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04151 -228801 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் . இது தவிர , அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன . 


கள்ளக்குறிச்சி வட்டத்திற்கு 04151 -222449 என்ற எண்ணிலும் , கல்வராயன்மலை வட்டத்திற்கு 04151 - 242243 என்ற எண்ணிலும் , சின்னசேலம் வட்டத்திற்கு 04151 - 257400 என்ற எண்ணிலும் , சங்கராபுரம் வட்டத்திற்கு 04151 235329 என்ற எண்ணிலும் , உளுந்தூர்பேட்டை வட்டத்திற்கு 04149 - 222255 என்ற எண்ணிலும் , திருக்கோவிலூர் வட்டத்திற்கு 04153 - 252316 என்ற எண்ணிலும் வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார் .