செய்திகள் :

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் ஆய்வு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , வாசுதேவனூர் நியாய விலைக் கடை அருகில் , பிரதிவிமங்கலம் நூலகம் , வடதொரசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , தியாகதுருகம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் செம்பியன்மாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் இன்று ( 24.07.2023 ) ஆய்வு செய்தார் . 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் , எந்த பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரமாகவும் , பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாகவும் , வறுமையை ஒழித்து வாழ்கை தரத்தை உயர்த்துவதற்காகவும் , சமூகத்தில் பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு உறுதுணையாக இருப்பதற்காகவும் மகளிருக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினை தருமபுரியில் இன்று தொடங்கி வைத்தார்கள் . 


அதன்படி , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 766 நியாய விலை கடைகளில் 4,34,663 குடும்ப அட்டைகள் உள்ளன . இதில் , முதற்கட்டமாக கள்ளக்குறிச்சி வட்டத்தில் 100 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 52,233 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்களும் , சின்னசேலம் வட்டத்தில் 52 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 27,250 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்களும் , சங்கராபுரம் வட்டத்தில் 139 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 70,110 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்களும் , கல்வராயன்மலை வட்டத்தில் 23 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 8,334 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்களும் , உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 184 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 75,481 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்களும் , திருக்கோவிலூர் வட்டத்தில் 82 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 41,948 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 580 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 2,75,356 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யப்படுவதற்காக 580 சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன . இப்பணிகளை மேற்கொள்ள 807 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு முதற்கட்ட பதிவு முகாம் நடைபெற்று வருகிறது .சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் , சின்னசேலம் கூட்டுறவு சங்க நியாய விலைக்கடை எண் -6 க்குட்பட்ட குடும்ப அட்டைகள் , வாசுதேவனூர் கிராமத்தில் வாசுதேவனூர் நியாய விலைக்கடைக்குட்பட்ட குடும்ப அட்டைகள் , பிரதிவிமங்கலம் நூலகத்தில் கரிம்சாதக்கா , பிரதிவிமங்கலம் காலனி நியாய விலைக்கடைக்குட்பட்ட குடும்ப அட்டைகள் , வடதொரசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வடதொரசலூர் , காலனி நியாய விலைக்கடைக்குட்பட்ட குடும்ப அட்டைகள் , தியாகதுருகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தியாகதுருகம் நியாய விலைக்கடைக்குட்பட்ட குடும்ப அட்டைகள் மற்றும் செம்பியன்மாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செம்பியன்மாதேவி நியாய விலைக்கடைக்குட்பட்ட குடும்ப அட்டைகள் மாதந்தோறும் மகளிர்களுக்கு ரூ .1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து , முகாமில் போதுமான வசதிகளும் , பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு கூடுதலான தன்னார்வலர்களை பணியமர்த்தி மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் . 


இந்நிகழ்வுகளில் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் செல்வி.சு.பவித்ரா , மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திருமதி.பா.ஷெர்லி ஏஞ்சலா , சின்னசேலம் வட்டாட்சியர் திருமதி.இந்திரா , உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் திரு.கே.ராஜி , குறு வட்ட வருவாய் ஆய்வாளர்கள் , கிராம நிர்வாக அலுவலர்கள் , ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் , அரசு அலுவலர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் உடனிருந்தனர் .