கள்ளக்குறிச்சியில் தோட்டக்கலை துறை சார்பில் தக்காளி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது . இப்பயிற்சி வகுப்புகளில் பயின்று TNPSC Group - IV தேர்வில் தேர்ச்சி பெற்று பழங்குடியினர் பிரிவில் மாநில அளவில் முதலிடமும் , TNPSC- சர்வேயர் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாணை பெற்றுள்ளனர் . மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டநிரல் -2023
படி TNPSC Group −1 தேர்விற்கான அறிவிப்பு ஆகஸ்ட் -2023 ஆம் மாதத்தில்
வெளியிடப்படவுள்ளதால் இத்தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில் TNPSC Group - 1 துணை ஆட்சியர் , காவல்துறை துணை கண்காணிப்பாளர் , உதவி இயக்குநர் ( ஊரக வளர்ச்சித்துறை ) , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற பதவிகளுக்கான முதனிலை தேர்விற்கும் மற்றும் Group - II முதனிலை தேர்விற்கும் ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் 15.07.2023 முதல் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடத்தப்பட உள்ளது . இப்பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள் வழங்கப்படும் , முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் .
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் , மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குறிச்சி , 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டோ அல்லது https://forms.gle/jokdw4YCmtuUEM8d8 என்ற கூகுள் படிவத்தில் தங்களின் விவரத்தினை பதிவுசெய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் . இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இ.ஆ.ப. , அவர்கள் தெரிவித்துள்ளார் .















