கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப , அவர்கள் வழங்கினார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , சிறுவங்கூரில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப , அவர்கள் ( 15.09.2023 ) ஆய்வு மேற்கொண்டார் .
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :
தமிழகத்தில் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவதை தொடர்ந்து , கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தனி வார்டுகளை அமைத்திட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது .
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிப்பட்டன . கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைப்பெற்று வரும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையினை பார்வையிடப்பட்டன . பின்னர் , மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது . என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் .
இவ் ஆய்வின்போது , அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ஆ.உஷா , மருத்துவ கண்காணிப்பாளர் மரு.ச.நேரு , இணை பேராசிரியர் மரு.பொற்செல்வி மரு.சமீம் பேராசிரியர் மரு.தீபா அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் , மாணவ , மாணவியர்கள் கலந்துகொண்டனர் .















