செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் இயங்கி வரும் புனித அன்னாள் மன நல காப்பகம்ஆய்வு

post image

 21.7.2023. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணையின்படி,கள்ளக்குறிச்சி  மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் இயங்கி வரும் புனித அன்னாள் மன நல காப்பகத்தினை , இணை இயக்குனர். மருத்துவ பணிகள் மருத்துவர் திரு.செந்தில் அவர்கள், தலமையில்,மாவட்ட சமூக நல அலுவலர்.செல்வி.தீபிகா, அவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி.அவர்கள்.மற்றும் மன நல மருத்துவர் திருமதி.பிரவீனா அவர்கள் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது்.


மன நலம் பாதிக்கப்பட்டோர் பராமரிப்பு ,உணவு,படுக்கை வசதி மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது.


மகளிர்க்கான தனி கட்டிடம் கேட் வசதி அவர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


ஆய்வின்போது..     ஆண்கள்.  28      பெண்கள் 24 இருந்தனர்.


மாதாந்திர ஆய்வு,மாதாந்திர மருத்துவர் வருகை,

மருந்து இருப்பு உள்ளது.


கட்டிடம் காற்றோட்டம் சுற்றுப்புர தூய்மை மற்றும் பயிற்சி அறைகள் ஆய்வு செய்யப்பட்டது.