கள்ளக்குறிச்சி ஸ்ரீ ராஜு இருதயம் மற்றும் தோல் மருத்துவமனை சார்பில் AED இயந்திரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்களிடம் வழங்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , கள்ளக்குறிச்சி ஸ்ரீ ராஜு இருதயம் மற்றும் தோல் மருத்துவமனை சார்பில் உலக இருதய விழாவை முன்னிட்டு சாமானியர்களும் பயன்படுத்தக் கூடிய உயிர்காக்கும் AED ( Automated External Defibrillator ) இயந்திரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நிருவிட மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்களிடம் இன்று ( 29.09.2023 ) வழங்கப்பட்டது .
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுத்து , உயிரைகாக்கும் , சாமானியர்களும் பயன்படுத்தக் கூடிய ரூ .1.25 இலட்சடம் மதிப்பிலான AED இயந்திரம் வழங்கப்பட்டது . இதன் மூலம் திடீரென ஒருவர் மயக்கமடைந்து கீழே விழும் பட்சத்தில் , அவரை இந்த இயந்திரத்துடன் இணைக்கும் போது அவரின் இருதய துடிப்பை கண்டறிந்து , முதலுதவி தேவைப்படின் இந்த இயந்திரத்தின் வழிகாட்டலோடு முதலுதவி அளிக்க முடியும் .
முதலுதவி பலன் அளிக்காத பட்சத்தில் டீபிப்ரிலேட்டர் ( Defibrillator ) உதவியுடன் இருதயத்திற்கு அதிர்ச்சியை உண்டாக்கி மறுபடியும் நின்ற இருதயத்தை செயல்படவைக்க முடியும் . இதனால் மாரடைப்பினால் வரும் உயிர்சேதத்தையும் , மூளைச்சாவையும் சாமானியர்களும் தடுக்க முடியும் . தொடந்து , பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் . இந்த இயந்திரத்தினை பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மாரடைப்பு ஏற்படும்போது எளிதில் பயன்படுத்தி உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் .
முன்னதாக , இயந்திரத்தின் பயன்பாடு மற்றும் பயிற்சி குறித்து இருதய சிகிச்சை நிபுணர் மரு.கே.பாபு சக்ரவர்த்தி பயிற்சி அளித்தார் .
இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) மரு.டி.சுரேஷ் , ஸ்ரீ ராஜு இருதயம் மற்றும் தோல் மருத்துவமனை மருத்துவர் மரு.இந்துபாலா ஆகியோர் உடனிருந்தனர் .















