கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலக வாகனம் ஏலம் விடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் , கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலக ஈப்பு வாகன எண் TN.01.G.0665 முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து , ஏலத்தின் மூலம் விற்பனை செய்வதற்கான பொது ஏலமானது வருகின்ற 05.09.2023 அன்று காலை 10.00 மணிக்கு கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெறும் . ஏலம் எடுக்க விரும்புவோர் 01.09.2023 அன்று காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தை பார்வையிட்டுக் கொள்ளலாம் .
மேலும் , ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றே ரூ .3,000 முன்பணமாக செலுத்தி , தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் . மேலும் , ஏலம் எடுத்தவர்கள் வாகனங்களுக்கான ஏலத்தொகையுடன் அதற்குண்டான 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியினையும் ( 18 % GST ) சேர்த்து ரொக்கமாக அன்றைய தினத்திமே செலுத்திட வேண்டும் என்பதையும் தெரிவிக்கப்படுகிறது
அறிவிப்பின் மூலம்
மாவட்ட ஆட்சி தலைவர்
திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவித்துள்ளார் . தகவல்















