செய்திகள் :

சின்னசேலம் புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் உத்தரவு

post image

சின்னசேலம் புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் உத்தரவு 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் வி.கூட்ரோடு அருகே மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப , அவர்கள் ஆய்வுப் பணி முடித்து திரும்ப வரும் வழியில் , சின்னசேலம் புறநகர் தேசிய நெடுஞ்சாலை ஆவின் பாலகம் அருகில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதை , பார்வையிட்டார் . தொடர்ந்து விபத்தில் பாதிக்கப்பட்ட கோமுகி அணை கருந்தலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த திரு.ஆறுமுகம் ( வயது 57 ) என்பவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும் , அப்பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைத்திடவும் , பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளவும் நெடுஞ்சாலைத்துறை , காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார் .