செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் அருகில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் , நலத்திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பினை பொதுமக்கள் இன்று ( 28.07.2023 ) ஆர்வமுடன் பார்வையிட்டனர் .
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் . தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது .
அதன்படி , பொதுமக்கள் தமிழக அரசின் சாதனைகள் , நலத்திட்டங்களை தெரிந்து கொள்வதற்காக சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் அருகில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்பட தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டன . இப்புகைப்பட கண்காட்சியில் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும் , மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் , மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள் , அரசின் நலத்திட்ட உதவிகள் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகளையும் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர் .















