செய்திகள் :

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டார்

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தழிழ்நாடு நாள் சிறப்பு குறித்து அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பினை இன்று ( 24.07.2023 ) பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர் . 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் . தமிழ்நாடு அரசின் திட்டங்கள் , சாதனைகள் மற்றும் தமிழ்நாட்டின் வரலாறு ஆகியவை பற்றி பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது . 


மேலும் , பொதுமக்கள் தமிழ்நாடு நாள் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ள , கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்பட தொகுப்பு 18.07.2023 முதல் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன . இப்புகைப்பட கண்காட்சியில் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும் , மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் , மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள் , அரசின் நலத்திட்ட உதவிகள் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகள் , தமிழ்நாடு நாள் குறித்த சிறப்புகள் உள்ளிட்டவைகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர் .