செய்திகள் :

தகவல்‌ அறியும்‌ உரிமைச்‌ சட்டம்‌ குறித்த விழிப்புணர்வு மாரத்தான்‌ போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.ஷ்ரவன்‌ குமார்‌, இஆப, அவர்கள்‌ தொடங்கி வைத்தார்‌

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக வளாகம்‌ அருகில்‌, மாவட்ட


நிர்வாகம்‌ சார்பில்‌, தகவல்‌ அறியும்‌ உரிமைச்‌ சட்டம்‌ 2005 விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு,

மாவட்ட அளவிலான மாரத்தான்‌ ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌

திரு.ஷ்ரவன்‌ குமார்‌, இப, அவர்கள்‌, சங்கராபுரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.தா.உதயசூரியன்‌,

மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.ந.மோகன்ராஜ்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ இன்று

(07.10.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்‌.


தமிழ்நாடு தலைமை தகவல்‌ ஆணையர்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலுக்கிணங்க, தகவல்‌:

பெறும்‌ உரிமைச்‌ சட்டத்தின்‌ விதிகள்‌ தொடர்பாக பொதுமக்களிடம்‌ விழிப்புணர்வு ஏற்படுத்திடும்‌.

பொருட்டு, தகவல்‌ பெறும்‌ உரிமைச்‌ சட்ட வார விழா அக்டோபர்‌ மாதம்‌ 05ஆம்‌ தேதி முதல்‌ 12ஆம்‌

தேதி வரை ஒவ்வொரு ஆண்டும்‌ கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி

மாவட்டத்தில்‌, பொதுமக்கள்‌ மற்றும்‌ மாணவர்களுக்கு தகவல்‌ உரிமைச்‌ சட்டம்‌ குறித்து

விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்‌ துறை, வருவாய்‌ துறை, சமூக

நலத்துறை மற்றும்‌ மாவட்ட நிர்வாகம்‌ இணைந்து, மாபெரும்‌ விழிப்புணர்வு மராத்தான்‌ ஓட்டம்‌ இன்று

நடைபெற்றது.


இப்போட்டியில்‌, 220க்கும்‌ மேற்பட்ட பொதுமக்கள்‌ மாணவ, மாணவியர்கள்‌ கலந்து

கொண்டு, தகவல்‌ அறியும்‌ உரிமைச்சட்டம்‌ குறித்து தெரிந்து கொண்டு, பொதுமக்களுக்கு

விழிப்புணர்வு ஏற்படுத்தினர்‌. இம்மாரத்தான்‌ ஓட்டப்போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர்‌.

அலுவலகத்திலிருந்து துவங்கி கச்சிராப்பாளையம்‌ போகும்‌ சாலை வழியாக சென்று

ஏர்வாய்ப்பட்டினத்தில்‌ நிறைவுற்றது.


இப்போட்டியில்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (பொது) மரு.து.சுரேஷ்‌,

வேளாண்மை துணை இயக்குநர்‌ (திட்டம்‌) திரு.செ.சுந்தரம்‌, மாவட்ட சமூக நல அலுவலர்‌

செல்வி.எஸ்‌.தீபிகா, மாவட்ட வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்பு துறை அலுவலர்‌ திரு.பா.ஷெர்லி

ஏஞ்சலா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்‌ திரு.க.சுப்பிரமணி, மாவட்ட விளையாட்டு மற்றும்‌

இளைஞர்‌ நலன்‌ அலுவலர்‌ திருமதி.ஆர்‌.ஜெயக்குமாரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்‌, உடற்கல்வி

ஆசிரியர்கள்‌, அரசு அலுவலர்கள்‌, பொதுமக்கள்‌ மற்றும்‌ மாணவ, மாணவியர்கள்‌ கலந்துகொண்டனர்‌.