செய்திகள் :

தகுதியுடைய அனைவருக்கும் அரசின் திட்டங்கள் கொண்டு சேர்க்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்தார்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் , பாதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு , நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்களும் , உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜெ.மணிக்கண்ணன் அவர்களும் இன்று ( 02.10.2023 ) பங்கேற்றனர் . 


கிராம சபை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் " எல்லார்க்கும் எல்லாம் ” கிராம சபை குறித்த குறும்படம் மற்றும் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் விடியல் பயணம் - மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து போக்குவரத்து , முதலமைச்சரின் காலை உணவு திட்டம் , புதுமைப்பெண் திட்டம் , கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த காணொலி காட்சிகள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திரையிடப்பட்டன . 


பின்னர் , சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற " ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள் ” சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரையினை கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ள பொதுமக்களுக்கு நேரடி காணொலி காட்சி காட்சிப்படுத்தப்பட்டது . தொடர்ந்து , கிராம சபை கூட்டத்தில் கிராம சபை பொருள்கள் குறித்து விவாதமும் , தீர்மானமும் , நிறைவேற்றப்பட்டது . 


பின்னர் , இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது : 


அக்டோபர் 02 மகாத்மா காந்தி பிறந்தநாளான இன்று கிராம சபை கூட்டத்தில் பற்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க , ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராம சபைகளின் எண்ணிக்கை 4 லிருந்து 6 ஆக உயர்த்தப்பட்டு , குடியரசு தினம் ( ஜனவரி 26 ) , உலக தண்ணீர் தினம் ( மார்ச் 22 ) , தொழிலா தினம் ( மே 1 ) , சுதந்திர தினம் ( ஆகஸ்ட் 15 ) , காந்தி ஜெயந்தி ( அக்டோபர் 2 ) , ஊராட்சி தினம் ( நவம்பர் 1 ) ஆகிய 6 தினங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது . 


இக்கிராம சபையின் நோக்கம் , கிராமங்களில் எந்தெந்த துறைகள் மூலம் வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது மற்றும் செயல்படுத்தப்படவுள்ளது என்பது குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது அகும் . மேலும் , கிராமங்களில் உள்ள அடிப்படை வசதிகளை குறித்து பொதுமக்கள் அலுவலர்கள் கலந்துரையாடி தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்யவும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்கள் .குறிப்பாக , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கு என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் . பெண்களுக்காக இலவச பேருந்து பயணம் , தற்போது , பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக கடந்த மாதம் முதல் கலைஞர் உரிமைத் திட்டம் என்ற திட்டம் மூலம் வங்கி கணக்கில் மாதம் ரூ .1,000 செலுத்தி வருகிறார்கள்.மேலும் , கலைஞர் உரிமைத் திட்டம் மூலம் உரிமைத் தொகை வராத பயனாளிகள் வட்டாட்சியர் அலுவலகம் அல்லது இ - சேவை மையங்களுக்கு சென்று கட்டணம் இல்லாமல் மேல்முறையீடு செய்ய வேண்டும் . தகுதி உடைய ஒரு பெண் பயனாளியும் இத்திட்டத்தில் விடுபடமாட்டார்கள் . மேல்முறையீடு செய்தவர்களுக்கு 1 மாத காலத்திற்குள் தகுதி அடிப்படையில் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் . மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் தங்கள் வங்கி கணுக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் . 


மேலும் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நான் முதல்வன் திட்டம் , அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியை தொடங்க வேண்டும் என் ற்காக புதுமைப்பெண் திட்டம் போ பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள் . கள்ளக்குறிச்சி மாவட்டம் , விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளதால் வேளாண் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது . பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் பொங்கள் பண்டிகைக்ககுள் வீடுகளை கட்டி குடிசை இல்லா கிராமமாக இக்கிராமத்தை மாற்றிட முடியும் . வீடு கட்ட இயலாத பயனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக வீடு கட்டவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் . பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும் . தகுதியுடைய அனைவருக்கும் அரசின் திட்டங்கள் கொண்டு சேர்க்கப்படும் . தற்போது , மழைக் காலங்கள் வருவதினால் நம் கிராமப்புற பகுதியில் தண்ணீர் தேங்காமல் சுத்தமாகவும் , சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டு டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுத்தும் , நோய் பரவலில் இருந்து நம்மை காத்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் . 


இக்கிராம சபை கூட்டத்தில் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ச.செல்வராணி , வேளாண்மை இணை இயக்குநர் திரு.ச.கருணாநிதி , உதவி இயக்குநர் ஊராட்சிகள் திருமதி.ரெ.ரத்தினமாலா , உதவி திட்ட அலுவலர் மகளிர் திட்டம் திரு.ராஜா , திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ரெ.கண்ணன் , திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.இ.சாந்தி இளங்கோவன் , திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் திரு.ஜெ.ராமலிங்கம் , மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.வி.சுந்திர மூர்த்தி , மாவட்ட கல்வி அலுவலர் திரு.எல்.ஆரோக்கியசாமி , திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சொக்கநாதன் , திருமதி.சுமதி , பாதூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் திரு.எம்.ராமலிங்கம் , அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .