செய்திகள் :

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

post image

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டு திட்ட நிரலில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தோராயமாக 6,553 காலிபணியிடங்களுக்கும் , பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 3,587 காலிபணியிடங்களுக்கும் போட்டித்தேர்வுகள் நடப்பு ஆண்டில் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் , ஆசிரியர் தகுதி தேர்விற்கும் அறிவிப்பு வெளியாக 


உள்ளது . 


மேற்குறிப்பிட்ட தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 29.08.2023 முதல் வார நாட்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நடத்தப்படவுள்ளது . மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயன்பெறும் விதமாக நூலக வசதியும் , இணையதள வசதியும் , மாணவர்கள் அமர்ந்து படிக்க ஏதுவான வகுப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது . 


எனவே விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு 88072 04332 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் முன்பதிவு செய்து கொள்வதோடு , எதிர்வரும் 29.08.2023 செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு 18/63 , நேப்பாள் தெரு , கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் செயல்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தெரிவித்துள்ளார் .