செய்திகள் :

“ தமிழ்ச் செம்மல் ” விருதிற்கு தகுதியுடைய தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

post image

தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி , ஊக்கப்படுத்தும் வகையில் “ தமிழ்ச் செம்மல் ” என்ற விருது ஏற்படுத்தப்பட்டு 2015 - ஆம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது . தமிழ்ச் செம்மல் விருது பெறுபவர்களுக்கு ரூ .25,000 / - பரிசுத் தொகையும் , தகுதியுரைம் வழங்கப்பட்டு வருகிறது . 


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தினை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்று கொள்ளலாம் . விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்பு , நிழற்படம் இரண்டு , அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் எதிர்வரும் 10.10.2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் . 


மேலும் , தமிழ்ச் செம்மல் விருது வேண்டுவோர் தமிழ் வளர்ச்சித் துறையால் வழக்கப்படும் விருதுகள் ஏதும் இதற்கு முன் பெற்றிருக்கக் கூடாது . அகவை முதிர்ந்த தமிழறிஞர் , எல்லைக் காவலர் , தமிழறிஞர் நிதியுதவி பெற்று வருவபவராக இருக்க கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தெரிவித்துள்ளார் .