செய்திகள் :

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுதேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட பரிசோதனை நடைபெறவுள்ளது என மாவட்ட தோதல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு , இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை முதற்கட்ட பரிசோதனை ( First Level Checking ) செய்து தயார் நிலையில் வைத்திருக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது . 


அதனடிப்படையில் , பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப பொறியாளர்கள் 04.07.2023 முதல் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை முதற்கட்ட பரிசோதனை பணி மேற்கொள்ள வருகின்றனர் . எனவே , எதிர்வரும் 04.07.2023 அன்று காலை 9.00 மணியளவில் தச்சூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திர கிடங்கு திறக்கப்படவுள்ளதால் அனைத்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் .