படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார்.இ.ஆ.ப . , அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் 01.07.2023 தொடங்கும் காலாண்டிற்கு , படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது பெறப்படுகின்றன .
பத்தாம் வகுப்பு ( தோல்வி ) , பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 30.09.2023 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது .
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும் . மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.09.2023 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும் , இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும் . மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ .200 ம் பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ .300 - ம் , மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ .400 - ம் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ .600 - ம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ .600 - ம் மற்றும் மேல்நிலைகல்வி தேர்ச்சிக்கு ரூ .750 - ம் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000- ம் என்றவாறு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது .
மேலும் , உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெறவிரும்பும் மனுதாரர்கள் , தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து , கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் , இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் . அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் . மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீளவிண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவார்கள் . இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது .01.07.2023 உடன் தொடங்கும் காலாண்டிற்கான உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் 31.08.2023 தேதி வரை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும் , கள்ளக்குறிச்சியில் உள்ள 18/63 , நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் , வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார்.இ.ஆ.ப . , அவர்கள் தெரிவித்துள்ளார் .















