கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டார நீலமங்கலம் ஊராட்சியில் 100 சதவீத...
பட்டியலின முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு புரிந்தோர்கள் டாக்டர் அம்பேத்கர் தமிழ் நாடு அரசு விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சிதலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில்
2023-2024 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில்
பட்டியலின முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும்
"டாக்டர் அம்பேத்கர் தமிழ் நாடு அரசு விருது” ஐனவரி மாதம் 2024-ஆம்
ஆண்டில் திருவள்ளுவர் திருநாள் தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
எனவே, பட்டியலின முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு புரிந்து
தமிழ்வளர்ச்சிக்கு பாடுப்பட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில்
தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாவட்ட
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு
10.11.2023 மாலை 05.00 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம்,
கள்ளக்குறிச்சி -606202 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால்
மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தெரிவித்துள்ளார்.















