செய்திகள் :

பனை விதைகள் மற்றும் பனை கன்றுகள் 100 சதவீத மானியத்தில் பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அழைப்பு

post image

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தில் ஒன்றான பனை மேம்பாட்டு இயக்கம் ( Palmy rah Development Mission ) 2023-2024 ஆம் ஆண்டிற்கான திட்டத்தில் பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும் , பனை சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் , கள்ளக்குறிச்சி மாவட்ட தோட்டக்கலைத் துறைக்கு பனை விதைகளும் , பனை கன்றுகளும் மானியத்தில் விநியோகம் செய்ய ரூ .1.025 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . 


இத்திட்டத்தின் கீழ் பனை விதைகள் பயனாளி ஒருவருக்கு ( தனிநபர் ) அதிகபட்சமாக 50 விதைகளும் மற்றும் பனை கன்றுகள் பயனாளி ஒருவருக்கு ( தனிநபர் ) அதிகபட்சமாக 15 கன்றுகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளன . மேலும் , பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள் , ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு அதிகபட்சமாக 100 பனை விதைகள் மற்றும் 30 பனை கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும் . 


அணுகி 


அல்லது 


இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் , தங்கள் பகுதி உதவி தோட்டக்கலை அலுவலர் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இணையதள முகவரியில் https // www.tnhorticulture.tn.gov.in / tnhortnet / rdgistration பதிவு செய்து பயன் பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தெரிவித்துள்ளார் .