"பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்பபோம்” விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட சமூக நல பாதுகாப்பு துறை சார்பில் உலக பெண்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கல்வராயன்மலையில் உள்ள மாவடிப்பட்டு டேனிஷ்
மிஷன் உண்டு உறைவிடப்பள்ளியில் "பெண் குழந்தைகளை காப்போம் பெண்
குழந்தைகளுக்கு கற்பிப்போம்" விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் இன்று (13.10.2023) கொடியசைத்து தொடங்கி
வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 11,12 ஆகிய 2 நாட்களும் உலக பெண்
குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளுக்கான
உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தவும்,
உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பரப்புரைகள்
மேற்கொள்ளவும் உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
பின்னர், பாலின சமத்துவம், சகல துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி
உரிமை, பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளை களைதல்
போன்றனவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுத்து பெண் குழந்தைகள் நினைத்ததை
சாதிக்க உறுதுணையாக நின்று, பின்னாளில் சாதனைப் பெண்களாக மிளிர வைக்கும்
அவசியத்தை நினைவுகூறும் நாள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இப்பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவியர்கள், "பெண்கள்
பாதுகாப்பு, மகள் வேண்டாம் மருமகள் மட்டும் எப்படி சாத்தியம், சாதனை உனக்கு,
சாதாரணம் பெண்ணே, அச்சம் தவிர், பெண்ணாய் நிமிர், பெண் குழந்தையை காப்போம்,
பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்று உரக்க சத்தமிட்டவாறு விழிப்புணர்வு
பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணி,
மாவடிப்பட்டு டேனிஷ்மிஷன் பள்ளியில் தொடங்கி, கரியலூர் கோடைவிழா அரங்கில்
நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சில், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி.எஸ்.தீபிகா, டேனிஷ் மிஷன்
உண்டு உறைவிடப்பள்ளி தலைம ஆசிரியர் திரு.அஜி ஈவான்ஸ், பள்ளி ஆசிரியர்கள்,
மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்















