செய்திகள் :

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 10 கோடியே 18 இலட்சம் மதிப்பீட்டிலான வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் வழங்கினார்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜே.மணிக்கண்ணன் அவர்கள் முன்னிலையில் இன்று ( 28.07.2023 ) நடைபெற்றது . 


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது : 


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள் . இதில் குறிப்பாக மகளிர்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி திட்டம் , புதுமைப் பெண் திட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணிவியர்களுக்கு மாதந்தோறும் ரூ . 1,000 வழங்கும் திட்டம் , சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகள் ஆகும் . அதன் வரிசையில் தற்பொழுது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ .1,000 மும் வழங்கப்படவுள்ளது . இதேபோன்று மகளிர்களின் வாழ்வாதாரத்தையும் , பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்காக தமிழக அரசு மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு சுழல்நிதி வழங்கி வருகிறது . 


கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாய தொழில் நிறைந்த மாவட்டமாகும் . இம்மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பல்வேறு கடனுதவிகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது . அவ்வரிசையில் பெண்கள் பிறரை சாராமல் சுயமாக தொழில் செய்து முன்னேற்றம் அடைவதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 72 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ .10 கோடியே 18 இலட்சம் மதிப்பீட்டிலான வங்கி கடன் மற்றும் பல்வேறு பெருங்கடனுதவிகளை இன்று வழங்குகிறது . இதனால் இம்மாவட்டத்தில் உள்ள மக்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் . இதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இக்கடனுதவிகளை பெறும் மகளிர் சுய உதவி குழுக்கள் முறையாக தொகையினை பயன்படுத்தி வங்கிகளிடம் திருப்பி செலுத்தி வங்கிகளுக்கும் , தமக்கும் ஓர் நல் உறவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் . 


இந்நிகழ்வில் , மகளிர் திட்டம் ( திட்ட இயக்குநர் ) திரு.சு.சுந்தர்ராஜன் , இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மேலாண் இயக்குநர் / முதன்மை செயல் அலுவலர் திரு.அஜய்குமார் ஸ்ரீவாஷ்டவா , சேலம் மண்டல முதனமை மேலாளர் திரு.வி.ராமகிருஷ்ணன் , இந்தியன ஓவர்சிஸ் வங்கி மேலாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .