செய்திகள் :

மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் தொடங்கி வைத்தார்

post image


கள்ளக்குறிச்சி மாவட்டம் , தென்கீரனூர் கிராமத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் சன்ங்கலப் திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள்   22.06.2023  தொடங்கி வைத்தார் . 
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது : 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சுய தொழில் பயிற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது . கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரச்சிற்பங்கள் செய்யும் பணி பிரசிதி பெற்றதாகும் . மரச்சிற்பத்திற்கான புவிசார் குறியீடு கள்ளக்குறிச்சிக்கு கிடைத்ததன் மூலம் உலக அளவில் நம்முடைய மரச்சிற்ப பணிகள் போற்றப்பட்டு வருகிறது . அதனடிப்படையில் சிறப்பு முயற்சியாகவும் , மகளிர் சுய உதவி உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் தென்கீரனூர் கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வாயிலாக சன்ங்கலப் ( SANKALP ) திட்டத்தின்கீழ் மகளிர் மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி , ஹஸ்தகலா எட்டிகோப்பக்கா மற்றும் எம்.ஆர்எம்.ஆர்எம்.கல்சுரல் பவுன்டேஷன் மூலமாக மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு 2 மாதம் திறன் பயிற்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது . 
மேலும் , பெண்களின் திறமை பலமடங்கு வெளிகொணர்வதற்காக மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்க ஹஸ்தகலா எட்டிகோப்பக்கா மற்றும் எம்.ஆர்எம்.ஆர்எம்.கல்சுரல் பவுன்டேஷனை சேர்ந்த பத்ம ஸ்ரீ விருது பெற்ற பயிற்றுனர் திரு.சி.வி.ராஜு அவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது . இப்பயிற்சியில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவாக மரச்சிற்ப பொம்மை உள்ளிட்டவைகளுக்கும் பயிற்சி அளிக்கப்படும் . இந்த மரச்சிற்ப பயிற்சியை மகளிர் குழுக்களில் உள்ள மகளிர் மட்டுமின்றி மற்ற மகளிர்களையும் இணைத்து முழுவதுமாக இப்பயிற்சியினை கற்றுக்கொள்ள வேண்டும் . வீட்டில் இருந்த படியே இத்தொழிலை செய்து முதலீடு ஈட்ட முடியும் என்பதால் பெண்கள் ஆர்வமுடன் கற்றுக் கொண்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் . 
இந்நிகழ்வில் , மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் திரு.சிவநடராஜன் , மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் திரு.சம்பத்குமார் , திரு.கார்த்திகேயன் , தென்கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் , மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் .