மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் , மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் இன்று ( 12.07.2023 ) கொடியசைத்து தொடங்கி வைத்தார் .
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :
உலக மக்கள் தொகை தினம் அனுசரிப்பதற்கான நோக்கத்தையும் மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகளையும் அதைக் கட்டுப்படுத்துவதின் அவசியத்தையும் பொதுமக்கள் உணர வேண்டும் . உலக மக்கள் தொகை 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் நாள் 500 கோடியைத் தாண்டி விட்டது என்ற அபாயத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை அந்நா " உல மக்கள் தொகை தினம் ” என்று அறிவித்தது . பெருகி வரும் மக்கள் தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற , ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் நாள் உலக மக்கள் தொகை தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது . அதன்படி இன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மக்கள் தொகை தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்திடும் வகையில் கல்லூரி மாணவ , மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியும் , குடும்ப கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு ரத்தினையும் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்து . இப்பேரணி கள்ளக்குறிச்சி முக்கிய வீதி வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் .
மேலும் , இன்றைய உலக மக்கள் தொகை 800 கோடி , இந்தியாவின் மக்கள்தொகை 142.86 கோடி . தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8.36 கோடி எனவும் , 2023 - ஆம் ஆண்டின் கணக்கின்படி இந்திய அளவில் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதம் Child sex ratio CSR . 1000 ஆணுக்கு 919 பெண் எனவும் தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதம் ( Child Sex Ratio - CSR ) 1000 ஆணுக்கு 943 பெண் எனவும் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மக்கள் தொகை 15 லட்சம் ஆகும் . இதில் இம்மாவட்டத்தின் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதம் ( Child sex ratio- CSR ) 1000 ஆணுக்கு 927 பெண் எனவும் உள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்ட பிறப்பு விகிதம் 13.98 , கள்ளக்குறிச்சி மாவட்ட இறப்பு விகிதம் 5.36 ஆகும் . 2022-2023 ஆம் ஆண்டிற்கான சாதனை பெண்களுக்கு குடும்பநல அறுவைச் சிகிச்சை 6025 மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் .
பின்னர் , மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொகை தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியான " அளவோடு பெற்று நலமுடன் வாழ்வோம் ” என்ற தாரக மந்திரத்தின் படியும் , சிறு குடும்ப நெறி , திருமணத்திற்கு ஏற்ற வயது , முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப நலமுறைகள் , முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி , ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல் , தாய் சேய் நலத்தை பாதுகாத்தல் , பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல் , ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல் , பெண் சிசு கொலையை தடுத்தல் , இளம் வயது திருமணத்தை தடுத்தல் , இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல் , மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல் , சுற்றுச்சூழல் பாதிப்பை தடுத்தல் , மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல் , வறுமை ஒழிப்பு ஆகியவற்றின்முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட உறுதிமொழி அனைத்து துறை அரசு அலுவலர்கள் , கல்லூரி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர் . பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களுக்கு மஞ்சள்பையினை வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் , கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.நேரு , இணை இயக்குநர் ( சுகாதார பணிகள் ) மரு.செந்தில் , மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநர் மரு.மணிமேகலை , மண்டல மருத்துவ அலுவலர் / கூடுதல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மரு.அனுபமா , வட்டார மருத்துவ அலுவலர்கள் , இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் , இளநிலை நிருவாக அலுவலர் திரு.அசோகன் , மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திருமதி.புவனேஸ்வரி , புள்ளியல் உதவியாளர் திரு.சிவகுருநாதன் , வட்டார சுகாதார புள்ளியலாளர் திரு.அருண்குமார் , மற்றும் R.K.S கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர் .















