மது விலக்கை தேசிய கொள்கையாக வரையறுத்து சட்டம் இயற்ற வேண்டும் உளுந்தூர்பேட்டை மாநாட்டில் தீர்மானம்
மதுவிலக்கை தேசிய
கொள்கையாக வரையறுத்து சட்டம் இயற்றவேண்டும் என்று உளுந்தூர்பேட்டையில்நடந்த
வி.சி.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்
பட்டது.
மது ஒழிப்பு மகளிர் மாநாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம்
உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும்
போதைப்பொருள் ஒழிப்பு
மகளிர் மாநாடு
நடைபெற்றது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
தொல்.திருமாவளவன் எம்.பி.
தலைமை தாங்கி, மாநாட்டு
கொடியை ஏற்றி வைத்து
மாநாட்டை தொடங்கி
வைத்தார்.
தொடர்ந்து,
டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை
அணிவித்தும், புத்தர் சிலை
பாதத்தில் மலர் மாலை வைத்
தும் மரியாதை செலுத்தினார்.
மாநாட்டுக்கு மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநிலதுணை செயலாளர்கள் செஞ்சோலை, சிற்றரசி, மங்கையற்
கரசி, அமுதா பொற்கொடி
உள்பட பலர் முன்னிலை
வகித்தனர்.
மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் நற்சோணை வரவேற்புரை ஆற்றினார். தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய கிளை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.















