செய்திகள் :

மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ரூ .47,000 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி நபர்கள் அளித்த மனுவை பரிசீலனை செய்து அவர்களுக்கு உடனே நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் . இ.ஆ.ப. அவர்கள் இன்று ( 27.07.2023 ) வழங்கினார் . 


மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் காதுகேளாதா இரண்டு மாற்றுத்திறனாளி நபர்களும் , ஈமசடங்கு உதவி கோரி மாற்றுத்திறனாளி வாரிசு நபரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு அளித்தனர் . அம்மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உடனடியாக இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்த்திடும் வகையில் , இரண்டு காதுகேளாத மாற்றுத்திறனாளிக்களுக்கு காது கேட்கும் கருவி தலா ரூ .15,000 / மதிப்பீட்டிலும் , இயற்கை மரணம் எய்திய மாற்றுத்திறனாளிக்கான ஈமசடங்கு உதவித்தொகை ரு .17,000 / - க்கான காசோலையை மாற்றுத்திறனாளியின் வாரிசுதாரர்க்கும் என மொத்தம் 3 நபர்களுக்கு ரூ .47,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் . 


இந்நிகழ்வில் , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி , முடநீக்கியல் நிபுனர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர் .