செய்திகள் :

மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் 11.09.2023 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

post image

தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர்கள் 


சேர்க்கை செய்திட மாவட்ட அளவிலான ( PMNAM ) பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் பயிற்சி ( அப்ரண்டிஸ் ) சேர்க்கை முகாம் கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் மார்டன் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் 11.09.2023 திங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ளது . 


இம்முகாமில் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் , ( TNSTC ) மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , ( TNEB ) மற்றும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை I & II போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள் , சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 500 க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர் . ITI முடித்தவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம் . மேலும் ITI சேர்ந்து பயிற்சி பெற முடியாத 10 - ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் கல்வி தகுதியுடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் பிரஸ்ஸர் அப்ரண்டிஸ்ஸாக சேர்ந்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சியும் , ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம் . இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ .8,500 முதல் ரூ .10,000 வரை நிறுவனத்தால் வழங்கப்படும் எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் .