செய்திகள் :

மாவட்ட காஜி நியமனம் செய்ய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தகவல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட காஜி மற்றும் காஜி தேர்வுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு

விருப்பமுள்ள தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட

ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தற்போதுள்ள மாவட்ட காஜி திரு.யு.அக்பர் அலி அவர்களின்

பதவிக்காலம் 15.09.2020 முதல் 14.09.2023 அன்று முடிவடைகிறது. தற்போது கள்ளக்குறிச்சி

மாவட்டத்திற்கு காஜி நியமனம் செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரசாணையில்

மாவட்ட காஜி நியமன தேர்வுக்குழு (District Level Selection Committee) அமைத்து கள்ளக்குறிச்சி

மாவட்ட காஜி நியமனம் செய்ய மூன்று நபர்கள் கொண்ட தேர்ந்தோர் பட்டியலை (Panel of names)

அவர்கள் புகைப்படத்துடன் கூடிய சுயவிவரக்குறிப்புகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்

அறிக்கை மற்றும் இதர விவரங்களுடன் சரிபார்க்கும் பட்டியல் ஆகியவற்றினை அரசுக்கு

அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட காஜி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் மாவட்ட காஜி நியமன

தேர்வுக்குழு இடம் பெற விண்ணப்பிப்பவர்கள், தனியர் ஆலிம் அல்லது பாசில் அல்லது முப்தி

அல்லது அரபு கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் அல்லது ஆசிரியராக பணிபுரிந்த

அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். சமூக நலனில் அக்கரை கொண்டு சமூக

முன்னேற்றித்திற்காக பாடுப்பட்டு நற்பெயர் பெற்றவராக இருக்க வேண்டும். தனியர் ஆலிம் அல்லது

பாசில் ஆக இருப்பதுடன் இஸ்லாம் மார்க்க கல்வியில் புலமைப்பெற்றவராகவும் அரபு கல்லூரி

அல்லது கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் அல்லது ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக

இருக்க வேண்டும். இக்குறிப்பிடப்பட்ட தகுதியுடையவர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட வட்டாட்சியர்

அலுவலகத்தில் வருகின்ற 15.11.2023 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இதுதொடர்பானகூ டுதல் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை 94999 55609 என்ற தொலைபேசி

எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார்,

இஆப, அவர்கள் தெரிவித்துள்ளார்.