மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான ஒருங்கினைந்த வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்படும் என மாவட்ட திட்ட குழு தலைவர் / மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமதி.பெ.புவனேஸ்வரி பெருமாள் அவர்கள் தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட திட்ட குழு தலைவர் / மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமதி.பெ.புவனேஸ்வரி பெருமாள் அவர்கள் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் முதல் கூட்டம் இன்று ( 28.06.2023 ) நடைபெற்றது . மாவட்ட திட்ட குழு தலைவர் / மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊரக பகுதிகளுக்கும் , 3 நகர்புற பகுதிகளுக்கும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் . தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இனறைய தினம் பதவிபிரமானம் செய்து வைக்கப்பட்டது . தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மாவட்ட திட்ட குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
மேலும் , மாவட்ட வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்காக மாவட்டத்தின் இறய்கை வளம் மற்றும் மனித வளம் சம்மந்தமான அனைத்து விவரங்களை சேகரித்து தொகுத்து தகவல் தளம் அமைத்தல் , வரைபடம் தயாரித்து மாவட்டத்தின் வள ஆதார வாய்ப்புகளை மதிப்பிடுதல் செய்யப்படவுள்ளது . தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி , மாவட்ட முழுமைக்கான வரைவு வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்படும் . ஊரக மற்றும் நகர்புறங்களில் நீர்வளம் மற்றும் ஏனைய இயற்கை வளங்களை பாதுகாத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது . மேலும் , மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான ஒருங்கினைந்த வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்படும் . இத்திட்ட பணிகளுக்கு திட்டகுழு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென மாவட்ட திட்ட குழு தலைவர் / மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அவர்கள் தெரிவித்தார் .
முன்னதாக 1. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வார்டு எண் 7 திரு.மு.தங்கம் அவர்களுக்கும் , 2. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வார்டு எண் 19 திரு.ஜி.ஆர்.வசந்தவேல் அவர்களுக்கும் , 3 . மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வார்டு எண் 5 திரு.கு.கோவிந்தராஜ் அவர்களுக்கும் , 4. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வார்டு எண் 1 திருமதி.பா.அஸ்வினி அவர்களுக்கும் , 5.மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வார்டு எண் 3 திருமதி.ஆர்.அமிர்தம் அவர்களுக்கும் , 6. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வார்டு எண் 8 திருமதி.அ.அகிலாபானு அவர்களுக்கும் , 7. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வார்டு எண் 9 திரு.மு.முருகேசன் அவர்களுக்கும் , 8. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வார்டு எண் 10 திருமதி.சி.அலமேலு அவர்களுக்கும் , 9. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வார்டு எண் 18 திரு.வி.சுந்தரமூர்த்தி அவர்களுக்கும் , 10. கள்ளக்குறிச்சி நகராட்சி உறுப்பினர் வார்டு எண் 20 திருமதி.வெ.உமா அவர்களுக்கும் , 11. மணலூர்பேட்டை பேரூராட்சி உறுப்பினர் வார்டு எண் 2 திருமதி.எம்.சரஸ்வதி , 12. உளுந்தூர்பேட்டை நகராட்சி உறுப்பினர் வார்டு எண் 8 திரு.த.செல்வம் டேனியல்ராஜ் உள்ளிட்ட 12 உறுப்பினர்களுக்கு மாவட்ட திட்ட குழு தலைவர் அவர்கள் பதவிபிரமானம் செய்து வைத்தார் . பின்னர் , 4 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .
இக்கூட்டத்தில் , மாவட்ட ஊராட்சி குழு செயலாளர் திரு.எம்.முரளிதரன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி ) திரு.பி.வி.குமார் , மாவட்ட முதன்மை நிலை அலுவலர்கள் , நகராட்சி ஆணையர்கள் , பேரூராட்சி செயல் அலுவலர்கள் , மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் .















