முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவாக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய உருது துவக்கப்பள்ளியில் ( பெண்கள் ) முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் முன்னோட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
விரிவாக்கத்திற்கான திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் ( 21.08.2023 ) பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற விதி 110 - ன்கீழ் , 1 முதல் 5 - ம் வகுப்பு வரை அரசுத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலை பாதுகாக்கும் பொருட்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தினார்கள் . அதன்படி , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை வட்டாரத்திற்குட்பட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 14 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 16.09.2022 அன்று முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . மீதம் உள்ள 8 வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 638 அரசுப்பள்ளிகளில் எதிர்வரும் 25.08.2023 முதல் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது .
இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள 638 அரசுப்பள்ளிகளிலும் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு , இத்திட்டம் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது . இத்திட்டம் விரிவுபடுத்துவதற்கான முன்னோட்டம் இன்றைய தினம் தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய உருது துவக்கப்பள்ளியில் ( பெண்கள் ) நடத்தப்பட்டது . முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தமாகவும் , சுகாதாரமாகவும் உணவு சமைக்கப்பட்டு சரியாக நேரத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கிட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ள வேண்டுமென தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார் .
இந்நிகழ்வில் , திட்ட இயக்குநர் ( மகளிர் திட்டம் ) திரு.சு.சுந்தராஜன் , உதவி திட்ட அலுவலர் திரு.இரா.மாதேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர் .















