முன்னால் படை வீரர்கள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் அவர்கள் தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் அவர்கள் தலைமையில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் இன்று ( 27.06.2023 ) நடைபெற்றது .
மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது :
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , முன்னால் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது . அதனடிப்படையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் , முன்னால் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு , அம்மனுக்கள் மீது தீர்வு காண தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது . தமிழக அரசின் மூலம் முன்னால் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது .
அதன்படி , இரண்டாம் உலகப்போர் நிதியுதவி ( முபவீ ) ரூ .6,000 லிருந்து ரூ .10,000 , இரண்டாம் உலகப்போர் நிதியுதவி ( விதவைகள் ) ரூ .3000 லிருந்து ரூ .4,000 , மருத்துவ நிதியதவி ரூ .5,000 லிருந்து ரூ .7,000 , உடல் ஊனமுற்றோர் மற்றும் உடல் வளர்ச்சி குன்றியோர்களுக்கான நிதியதவி ரூ .5,000 , கண்கண்ணாடி நிதியுதவி ரூ .3,000 லிருந்து ரூ .4,000 என்பது தற்போது மனைவிக்கும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது , மாதாந்திர நிதியுதவி ரூ .3,000 லிருந்து ரூ .4,000 , திருமண நிதியுதவி ரூ .20,000 லிருந்து ரூ .25,000 வரை , திருமண நிதியுதவி தற்போது இரு மகள்களுக்கு நீட்டிப்பு உள்ளிட்ட நலத்திட்டங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது .
மேலும் , முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்கப்படுகிறது . முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் தொழில்கல்வி படிப்பிற்கு ரூ .25 ஆயிரமும் , பாலிடெக்னிக் படிப்பிற்கு ரூ .20 ஆயிரமும் , பட்டப்படிப்பிற்கு ரூ .10 ஆயிரமும் , பாரத பிரதமர் கல்வி நிதியுதவியின்கீழ் முதல் ஆண் சிறார்களுக்கு ரூ .30 ஆயிரமும் , பெண் சிறார்களுக்கு ரூ .36 ஆயிரமும் வழங்கப்படுகிறது . மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விகளில் முன்னாள் படைவீரர்களில் வாரிககளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது .
மேலும் , தொகுப்பு நிதியிலிருந்து 2022-2023ஆம் கல்வி ஆண்டு முதல் 1 முதல் 5 - ம் வகுப்பு வரை ரூ .500 லிருந்து ரூ .2,000 ஆகவும் , IIT , IIMs & National Law Schools ல் பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு ரூ .50,000 மும் , சைனிக் பள்ளியில் பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு ரூ .25,000 மும் என கல்வி உதவித் தொகை மற்றும் ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது . 1985 - க்கு முன்னர் படைப்பணியினை விட்டு வெளிவந்துள்ள முன்னாள் படைவீரர்கள் நீங்கள் பணியாற்றிய ஆவணக்காப்பகத்தின் ஓய்வூதியம் ஒப்பளிப்பு ஆணையில்தங்கள் மனைவியின் பெயரினை சேர்ப்பதற்கு முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது .
நிரந்தர படைத்துறை அலுவலராக முப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று வரும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ .1,00,000 மும் , குறுகிய கால படைத்துறை அலுவலராக முப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று வரும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ .50,000 மும் , இளநிலை படை அலுவலர் மற்றும் இதர பதவிகளில் முப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று வரும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ .25,000 மும் , ஒரே மகன் , மகள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மகன்கள் , மகள்களை இராணுவப் பணிக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு ரூ .20,000 மற்றும் ரூ .25,000 தொகையும் ரூ .1000 மதிப்புள்ள வெள்ளி பதக்கமும் வழங்கப்படுகிறது எனவே முன்னால் படை வீரர்கள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்தார் .
இக்கூட்டத்தில் , மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜவஹர்லால் , உதவி இயக்குநர் ( முன்னாள் படைவீரர் நலன் ) லெப்.கர்னல்.திருமதி.வெ.அருள்மொழி , முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் திரு.கோ.விஜயகுமார் , தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திருமதி.பெ.இராஜலட்சுமி , உதவி ஆணையர் ( கலால் ) பா.ராஜவேல் , துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர் .















