19.07.2023 , 21.07.2023 தேதிகளில் குறுகிய அளவிலான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள்தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியார்துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான ” வேலைவாய்ப்பு முகாம் ” நடைபெறுகிறது . எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த சிறு குறு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம் . இது ஒரு இலவசப்பணியே ஆகும் .
எதிர்வரும் 19.07.2023 புதன்கிழமை அன்று பி.எஸ்.சி , டிப்ளமோ , நர்ஸிங் , பார்மஸி மற்றும் இதர நர்ஸிங் தொடர்பான கல்வித்தகுதி உடையவர்களை தமிழக அளவில் முன்னனியில் உள்ள மருத்துவ துறைச் சார்ந்த நிறுவனங்களுக்கும் , கள்ளக்குறிச்சி பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகளுக்கும் கலந்து கொண்டு கல்வித்தகுதியின் அடிப்படையில் ஆட்களை தேர்வு
செய்ய உள்ளனர் .
மேலும் , எதிர்வரும் 21.07.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்களை ரூ .10,000 முதல் ரூ .25,000 வரை சம்பளத்தில் தமிழக அளவிலும் , கள்ளக்குறிச்சி பகுதிகளிலும் அமைந்துள்ள முன்னனி நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர் . இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது .
எனவே இவ்வேலைவாய்ப்பு முகாமிற்கு தகுதியும் விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் , தனியார்த்துறை நிறுவனங்களும் வருகின்ற 19.07.2023 மற்றும் 21.07.2023 தேதிகளில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை கள்ளக்குறிச்சி 18/63 நேபாள் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்வரன்குமார் , இஆப . , அவர்கள் தெரிவித்துள்ளார் .















