கள்ளக்குறிச்சி மாவட்டம் 5 வது வார்டு தீர்த்தாலு நகர் சிறுவர் பூங்காவில் சுகாதாரத்துறையின் சார்பில் மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டத்தின்கீழ் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப , அவர்கள் இன்று ( 07.08.2023 ) தொடங்கி வைத்தார் .
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் சுகாதார துறையின் சார்பில் மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டத்தின்கீழ் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது . அதன்படி , முதல் சுற்று தடுப்பூசி முகாம் ஆகஸ்ட் 7 - ஆம் தேதி முதல் 12 - ஆம் தேதி வரையிலும் , இரண்டாம் சுற்று தடுப்பூசி முகாம் செப்டம்பர் 11 - ஆம் தேதி முதல் 20 - ஆம் தேதி வரையிலும் , மூன்றாம் சுற்று தடுப்பூசி முகாம் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 14 - ஆம் தேதி வரையிலும் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்ட சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்றைய தினம் தொடங்கி வைத்து , குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணியினை பார்வையிட்டார் . தடுப்பூசி செலுத்திக்கொண்ட குழந்தைகளின் பெற்றோரிடம் தடுப்பூசி அட்டையினை வழங்கினார் . மேலும் , குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி , 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் விடுபடாமல் தடுப்பூசி செலுத்திட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் .
இந்நிகழ்ச்சியில் , துணை இயக்குநர் ( சுகாதாரப்பணிகள் ) மரு.இராஜா மற்றும் மருத்துவர்கள் , செவிலியர்கள் , சுகாதாரப் பணியாளர்கள் உடனிருந்தனர் .