செய்திகள் :

அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்விற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

post image

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இத்தேர்விற்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் . இத்தேர்வு 13.10.2023 முதல் இணையதளம் வாயிலாக நடைபெற உள்ளது . இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 27.06.2003 முதல் 27.12.2006 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும் . 


மேலும் , இத்தேர்விற்கான கல்வி தகுதி கணிதம் மற்றும் அறிவியல் பின்புலமாக கொண்ட 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 3 ஆண்டு டிப்ளமோ இன்ஜீனியரிங் முடித்தவர்களாக இருத்தல் வேண்டும் . மேலும் , இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு , https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொண்டு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17.08.2023 க்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் . பயிற்சி காலத்தில் மாதம் 21,000 முதல் 28,000 வரை ஊதியமும் , 4 ஆண்டு பயிற்சி கால முடிவில் பட்டப்படிப்பிற்கு இணையான திறன் சான்றிதழும் , 10 இலட்சம் வரை அக்னிவீர் நிதியும் வழங்கப்படும் . 


இத்தேர்வு தொடர்பான விவரங்கள் அறிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 04151-295422 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் . கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்கள் அதிகளவில் இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் .