செய்திகள் :

அட்மா திட்டத்தின் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி

post image

அட்மா திட்டத்தின் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி

கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க

மையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி

குறித்த பயிற்சி நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த கரும்பு

விவசாயிகளை அட்மா அலுவலர் சைமன் அவர்கள் வரவேற்றார் 

வேளாண்மை உதவி இயக்குநர் திரு-பொன்னுராசன் அவர்கள் தலைமை

தாங்கினார். வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி அவர்கள் முன்னிலை

வகித்தார்.

கரும்பு அலுவலர் சேவியர் அவர்கள் கலந்துகொண்டு கரும்பு

சாகுபடியின் நோக்கம் மற்றும் ரகங்கள் குறித்து விளக்கி பேசினார். மேலும்

கரும்பு நுண்ணூட்டங்கள் பெற்று கரும்பு பயிர்களுக்கு பயன்படுத்தும்படி

கேட்டுக்கொண்டார் 


வட்டார தொழில்நுட்ப மேலாளார் சைமன் அவர்கள் பேசுகையில்

மண்மாதிரி எடுத்தலின் முக்கியத்துவம்

இடுபொருட்களான திரவ உயிர் உரம் அஸோஸ்பைரில்லம், பொட்டாஷ்,

மற்றும் வேளாண்

பாஸ்போபாக்டீரியா போன்றவற்றின் செயல்திறன் பற்றி கூறினார்.

வேளாண்மை உதவி இயக்குநர் திரு.பொன்னுராசன்

அவர்கள்

வேளாண் இடுபொருட்களான கடப்பாறை, மண்வெட்டி, அரிவாள், இரும்பு (Ctrl)

தட்டு, களைகொத்து ஆகியன பெற்று பயன்பெறும்படி கூறினார். கூட்டத்தில்

50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

உதவி தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல், மணிவேல், மற்றும் கரும்பு

உதவி அலுவலர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.