தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் பாதுகாப்போர் சங்கம் சார்பில் நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் , மாற்று திறனாளிகள் வேலை வாய்ப்புக்களை முடக்கும் புதிய அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , கன்களில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக , மாவட்ட தலைவர் வைத்தியலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மாநில குழு உறுப்பினர் ஆறுமுகம் , மாவட்ட செயலாளர் பா.வேலு , உலகங்காத்தான் மாவட்ட பொருளாளர் மீனாட்சி , மாவட்ட துணை செயலாளர்கள் சுதா , பழனி , மாவட்ட துணைத் தலைவர் பத்மாவதி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் . முடிவில் ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் நன்றி கூறினார். தகவல்