செய்திகள் :

அனைத்து வளர்ச்சி பணிகளிலும் அத்தியாவசியப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து மேற்கொள்ள வேண்டும் என கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.பொன்.கௌதமசிகாமணி அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

post image

நாள் : 11.07.2023 


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழு தலைவர் / கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.பொன்.கௌதமசிகாமணி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் , விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.து.ரவிக்குமார் அவர்கள் , உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜெ.மணிக்கண்ணன் , கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.மா.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று ( 11.07.2023 ) நடைபெற்றது . 


இவ்வாய்வுக்கூட்டத்தில் கண்காணிப்புக் குழு தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது : 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து பொதுமக்களின் நலன்கருதி பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து , பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார் . மேலும் , இன்றைய தினம் நடைபெறும் மாவட்ட வளர்ச்சி , ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் நோக்கம் மத்திய , மாநில அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு பணிகளை விரைந்து முடித்து , பொதுமக்களுக்கு முழுமையாக கிடைத்திட ஏற்படுத்தப்பட்டது . 


மேலும் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட அரசின் இதர துறைகளின் மூலமாக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் , பிரதான் மந்திரி குடியிருப்புத் திட்டம் ( ஊரகம் ) , ஜல் ஜீவன் மிஷன் , தூய்மை பாரத இயக்கம் ( ஊரகம் ) , பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் , தேசிய கிராம சுயாட்சி திட்டம் , பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் , பாராளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம் , பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா , 15 - வது மத்திய நிதிக்குழு மானியம் , பிரதான் மந்திரி குடியிருப்புத் திட்டம் , தூய்மை பாரத இயக்கம் , தீனதயாள் உபத்யாயா கிராம ஜோதி யோஜனா , ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டுத்திட்டம் , தேசிய வாழ்வாதார இயக்கம் , மதிய உணவுத்திட்டம் , ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டப் பணிகள் , தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் , ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத்திட்டம் , பிரதம மந்திரி கௌரவ நிதித்திட்டம் , பிரதம மந்திரி கிருஷ் சஞ்சாயி யோஜனா திட்டம் , பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் , டிஜிட்டம் இந்தியா நிலபதிவுகள் நவீனமயமாக்குதல் திட்டம் , பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்குதல் திட்டம் , சர்வசிக்ஷா அபியான் திட்டம் , தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு திட்டம் , தோட்டக்கலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் உள்ளிட்ட 33 திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் , முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது , இப்பணிகளுக்கு ஒன்றிய அரசும் , மாநில அரசும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது . இத்திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது . 


மேலும் , பொதுமக்களுக்கு தேவைப்படும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் உயர்நிலை முதல் கீழ் நிலையில் உள்ள அலுவலர்கள் வரை முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் . மேலும் , அனைத்து வளர்ச்சி பணிகளிலும் அத்தியாவசியப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்பட வேண்டும் . அனைவருக்கும் வீடு வழங்குதல் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அனைவருக்கும் வீடுகள் கிடைத்திட உறுதி செய்ய வேண்டும் . புதிதாக துவங்கப்பட்டுள்ள இம்மாவட்டத்தில் அதிகமான வளர்ச்சி பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் . தற்பொழுது நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஒரு மாதத்திற்குள் விரைந்து முடித்திட வேண்டும் . 


மேலும் பொதுமக்கள் , மக்கள் பிரதிநிதிகளிடம் அளிக்கும் கோரிக்கைகளில் தான் மக்கள் பிரதிநிதிகள் வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பரிந்துரை செய்யப்படுகிறது . அதற்கான பணிகளை செயல்படுத்தும் அலுவலர்கள் அம்மக்களுக்கான பயனை விரைந்து கிடத்திட பணியாற்றிட வேண்டுமென கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.பொன்.கௌதமசிகாமணி அவர்கள் தெரிவித்தார் . 


இவ்வாய்வின்போது , மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ச.செல்வராணி , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்கம் ( திட்ட இயக்குநர் ) திரு.சு.சுந்தர்ராஜன் , கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் செல்வி.சு.பவித்ரா , வேளாண்மை இணை இயக்குநர் திரு.ச.கருனாநிதி , உதவி திட்ட அலுவலர்கள் , ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் , பேரூராட்சி தலைவர்கள் , அனைத்து நிலை மாவட்ட அலுவலர்கள் , நகராட்சி ஆணையர்கள் , செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் .