செய்திகள் :

அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தொடங்கி வைத்தார்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் அருகில்,

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் சார்பில், மாணவ,

மாணவியிருக்கான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்

திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள், இன்று (14.10.2023) கொடியசைத்து தொடங்கி

வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர்

அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை சிறப்புற கொண்டாடும் வகையில், அறிஞர்

அண்ணா மிதிவண்டி போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட தலைமை இடங்களில்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையகத்தின் மூலமாக நடத்திட

அறிவுறுத்தினார்கள். அதனடிப்படையில்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 17

வயதுக்குட்பட்டோர் மாணவ, மாணவியிருக்கும், 15 வயதுக்குட்பட்டோர் மாணவ,

மாணவியிருக்கும், 13 வயதுக்குட்பட்டோர் மாணவ, மாணவியிருக்கும் தனித் தனியாக

போட்டிகள் நடத்தப்பட்டது.

இப்போட்டிகளில் 17 மற்றும் 15 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து துவங்கி கச்சிராப்பாளையம்

போகும் சாலை வழியாக சென்று அக்ராபாளையம் வரை நிறைவுற்றது. 13 வயதுக்குட்பட்ட

கள்ளக்குறிச்சி மாவட்ட

மாணவ,

மாணவியர்களுக்கு

ஆட்சித்தலைவர்

அலுவலகத்திலிருந்து துவங்கி கச்சிராப்பாளையம் போகும் சாலை வழியாக சென்று

தோப்பூர் சாலையில் நிறைவுற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற 17 வயதுக்குட்பட்டோர்

மாணவ, மாணவியர், 15 வயதுக்குட்பட்டோர் மாணவ, மாணவியர் மற்றும் 13

வயதுக்குட்பட்டோர் மாணவ, மாணவியர்க்கு தனித்தனியாக முதல் பரிசாக ரூ5,000/-மும்,

இரண்டாம் பரிசாக ரூ.3,000/- மும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/-மும் மற்றும் ஆறுதல்

பரிசாக 4 முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாணவர், மாணவியர்க்கு தலா ரூ.250/- வீதம்

42 நபர்களுக்கும் வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் 234 மாணவ, மாணவியர்கள் கலந்து

கொண்டனர்.

இப்போட்டியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்

திருமதி.ஆர்.ஜெயக்குமாரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி,

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு.செல்வக்குமார், உடற்கல்வி இயக்குநர்கள்

திரு.பாலுசாமி, திரு.ஹரிகரன் உடற்கல்வி ஆசிரியர்கள் திரு.சாமிதுரை, திரு.சதிஸ்,

திரு.பாலமுருகன், திரு.ஆதி, திரு.தனஞ்செல்வன், திரு.சுரேஸ், திருமதி.கலைச்செல்வி

அரசு அலுவலர்கள், மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.