அலுவலக பணியாளர்கள் அனைவரும் வருடந்தோறும் சீரான இடைவெளியில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் அறிவுரை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பொது மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் இன்று ( 04.08.2023 ) தொடங்கி வைத்தார் .
முகாமினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரத் துறை சார்ந்த திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது . கள்ளக்குறிச்சியில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு , அப்பலோ நிறுவனம் மூலம் இன்றைய தினம் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இம்முகாமில் இரத்த அழுத்தம் , சர்க்கரை அளவு , இருதய நோய் , கண் பார்வை குறைபாடு , இ.சி.ஜி , உள்ளிட்டவற்றை கண்டறிய பொது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவர் ஆலோசனை வழங்கப்பட்டவுள்ளது . அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வருடந்தோறும் சீரான இடைவெளியில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .
பரிசோதனையில் ஏதேனும் உடல் உபாதைகள் கண்டறியப்பட்டால் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படும் . அரசு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் , நேரம் கிடைக்காமல் இதுநாள் வரை மருத்துவ பரிசோதனை செய்யாமல் இருப்பவர்கள் இந்த பரிசோதனை முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம் . இதன் மூலம் எந்தவொரு நோயும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் . எனவே , அரசு பணியில் ஈடுபட்டுள்ள நீங்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் .
இம்முகாமில் , மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) மரு.து.சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் .















