ஆடி பட்டத்தில் பயிர் சாகுபடி செய்திட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் அழைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காரீப் மற்றும் ரபி பருவத்தில் விவசாயிகள் உளுந்து பயிர் சாகுபடி செய்து வருகின்றனர் . இவ்வருடத்தில் ஆடிப்பட்டத்தில் அதிக அளவில் உளுந்து பயிர் சாகுபடி செய்ய
விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறது . தற்பொழுது தென்மேற்கு பருவமழை தொடங்கி இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது . இப்பருவமழையை பயன்படுத்தி விவசாயிகள் ஆடி பட்டத்தில் குறைந்த வயதுடைய ( 65-75 நாள் ) உளுந்து பயிர் சாகுபடி மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . பயிர் வகைகளை பயிரிடுவதன் மூலம் மண்வளம் மேம்படுவதுடன் , மண் அரிப்பை தடுக்கிறது . மேலும் மண்ணில் தழைச்சத்து நிலைபடுத்துதல் , அங்கக கரிம சேர்ப்பு மூலம் மண்ணின் அமைப்பை மேம்படுத்துதல் , கரையாத்தன்மை உடைய சத்துகளை திரட்டுதல் ஆகியவை பயறுவகை பயிர்களின் தனித்தன்னை ஆகும் . எனவே மண்வளத்தை அதிகரிப்பதிலும் சுற்றுசூழலை பாதுகாப்பதிலும் பயிர் வகை சாகுபடி இன்றியமையாத ஒன்றாக உள்ளது . பயறுவகைப்பயிர்கள் ஒரு நாளில் சராசரியாக எக்டருக்கு 1 கிலோ வரை தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது . இவ்வாறு நிலைநிறுத்தப்படும் தழைச்சத்தில் மூன்றில் இரண்டு பங்கு அடுத்த பயிரிடப்படும் பயிரினால் உபயோகிக்கப்படுவதால் உரச்செலவு பெருமளவில் குறைவதுடன் , பயிர் வகை செடிகளின் தழைகள் மண்ணில் மக்கி உரமாகி மண்வளத்தை மேம்படுத்துகிறது . மேலும் பயிர் சாகுபடிக்கு தேவையான உளுந்து விதைகள் 147.89 மெ.டன் , நுண்ணூட்டம் 209 மெ.டன் மற்றும் திரவ உயிர் உரம் 26,096 லிட்டர் 50 சதவீதம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கிடும் வகையில் , அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது . நெல்லுக்குப்பின் உளுந்து சாகுபடி திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ .400 வீதம் 8 கிலோ விதைக்கு மானியம் வழங்கப்படுகிறது . எனவே விவசாயிகள் ஆடி பட்டத்தில் உளுந்து மற்றும் பயிர் வகைகளை அதிக அளவில் பயரிட்டு இரட்டிப்பு வருமானம் பெற்று பயனடைந்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் தெரிவித்துள்ளார் .















