ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று ( 20.06.2023 ) நடைபெற்றது .
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் , மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது . ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் , பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்- II , மறு சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டம் , ஜல் ஜீவன் மிஷன் திட்டம் , தூய்மை பாரத இயக்கம் , பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மற்றும் 15 - வது மானியக்குழு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் , தொடங்கப்படாத பணிகள் , தற்போதைய நிலை , முடிவுற்ற பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன .
மேலும் , பொதுமக்களுக்கு நேரடியாக பயன்தரக்கூடிய அத்தியாவசியமான திட்ட பணிகளை விரைந்து முடித்திடவும் , பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளில் நடைபெற்று வரும் அங்கன்வாடி புனரமைப்பு பணிகள் , சுற்றுச்சுவர் பணிகள் , வகுப்பறை கட்டிடங்கள் , கழிவறை கட்டிடங்கள் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்து மாணவ மாணிவயர்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர வேண்டும் . கிராமப்புற வளர்ச்சிக்கு நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் விரைந்து செயல்படுத்திட வேண்டும் என நிலையான மண்டல அலுவலர்கள் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , உதவி பொறியாளர்கள் , பணிமேற்பார்வையாளர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் .
இவ்வாய்வின்போது , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ச.செல்வராணி , ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருமதி.ஆர்.மலர்விழி , உதவி திட்ட அலுவலர்கள் , நிலையான மண்டல அலுவலர்கள் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர் .















