ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கான பயிற்சி வகுப்பு எதிர்வரும் 17.07.2023 மற்றும் 18.07.2023 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையும் , தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையமும் , தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழுவும் இணைந்து ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கான பயிற்சி வகுப்பு எதிர்வரும் 17.07.2023 மற்றும் 18.07.2023 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்படவுள்ளது .
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை ஓவிய நுண்கலைக் குழுவுடன் இணைந்து தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் , 18 வயதிற்கு மேற்பட்ட ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கான சிறப்புக் லைப் பயிற்சி முகாம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தென்கீரனூர் , அண்ணாநகரில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட மரசிற்பக் கலைஞர்கள் , சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பு , விருக்சா மரசிற்ப பொதுப்பணிக்கூட்டமைப்பு கட்டடத்தில் வரும் 17.07.2023 மற்றும் 18.07.2023 ஆகிய 2 நாட்கள் நடத்தப்படவுள்ளது .
மேலும் , முகாமில் தமிழகத்தின் புகழ் வாய்ந்த ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு மரபு பாணி ஓவியம் , நவீன பாணி ஓவியம் , தஞ்சாவூர் ஓவியம் , கண்ணாடி ஓவியம் மற்றும் மரச்சிற்பம் ஓவியங்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர் . கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம் . இரண்டு நாட்கள் அளிக்கப்படும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஓவிய கலைஞர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி நிறைவுநாளில் பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ் வழங்கப்படும் .
மேலும் முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர் , முகவரி , தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு உதவி இயக்குநர் , மண்டலக் கலை பண்பாட்டு மையம் , மண்டல கயிறு வாரியம் அருகில் , வல்லம் சாலை , பிள்ளையார்பட்டி , தஞ்சாவூர் 613 403 என்ற முகவரிக்கு நேரிலோ , தொலைபேசி வாயிலாகவோ அணுகி , தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் . கூடுதல் விவரங்களுக்கு 04362-232252 அல்லது 94425 07705 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் .















