செய்திகள் :

கண்டுணர் சுற்றுலா

post image

கண்டுணர் சுற்றுலா


கள்ளக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை தொழிலுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை குறித்து கண்டுணர் சுற்றுலா அழைத்து செல்ல மாவட்ட ஆட்சியர் ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் மற்றும் கள்ளக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குநர் ந.பொன்னுராசன் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன் அடிப்படையில் டாக்டர் ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சார்ந்த ஆர்வமுள்ள 50 மாணவர்கள் பழைய சிறுவங்கூர் இயங்கும் "சங்கர் இயற்கை விவசாய பண்ணைக்கு"அழைத்து சென்றனர்  அங்கு அட்மா அலுவலர் இரா.சைமன் இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார். அதனை தொடர்ந்து இயற்கை விவசாயி திரு.ஜெயசங்கர் அவர்கள் இயற்கை வேளாண்மை சாகுபடி குறித்தும் அதனை எவ்வாறு மதிப்பு கூடடி அதிக லாபம் பெறலாம் என விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்து கூறினார். நிகழ்ச்சி முடிவில் பொ.சக்திவேல் நன்றி கூறினார். தகவ‌ல்