செய்திகள் :

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியுடைய ஒரு நபர்களும் விடுபடாமல் பணிகளை மேற்கொள்ள தன்னார்வலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவுறுத்தல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , நிறைமதி கிராமத்தில் வீடு வீடாக சென்று குடும்ப அட்டைதாரர்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் இன்று ( 20.07.2023 ) தொடங்கி வைத்தார் . 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ .1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிறைமதி கிராமத்தில் வீடு வீடாக சென்று குடும்ப அட்டைதாரர்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து , நிறைமதி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் போதிய வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்தார் . 


பின்னர் , சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை செயல்படுத்திட நியமிக்கப்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியினை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது : 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் முன்னேற்றம் குறித்து தனி கவனம் செலுத்தி வருகிறார் . புதுமைப்பெண் திட்டம் , மகளிர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்களில் வரிசையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமும் மகளிருக்கான ஒரு சிறந்த திட்டமாகும் . 


கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கென அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு முகாம்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . ஒவ்வொரு முகாமிற்கு வரும் பெண்களுக்கும் காத்திருக்கும் இடம் தனியாக இருக்க வேண்டும் . மகளிர் குழு அல்லது தன்னார்வலர்கள் பொதுமக்களின் விண்ணப்பதை பூர்த்தி செய்ய வேண்டும் . முகாமில் பணியாற்றும் அலுவலர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சரியாகவும் , விரைவாகவும் பதிவேற்றம் செய்ய வேண்டும் . முகாம் நடைபெறும் நாட்களில் குறித்த நேரத்திற்கு முன் அலுவலர்கள் முகாமிற்கு செல்ல வேண்டும் . பயனாளிகள் முகாமிற்கு குறித்த நேரத்தில் வரவில்லையென்றால் பொறுப்பாளர்களிடம் கூறி வரவைக்க வேண்டும் .மேலும் , இத்திட்டத்தின்கீழ் விவசாய பெண்கள் தகுதிவாய்ந்தவர்களாவர் . நம் மாவட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர் . அவர்களுக்கு குறித்த நேரத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யவேண்டும் . இப்பணிகளுக்கு கூடுதல் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது . மேலும் , இப்பணியினை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் , அலுவர்கள் முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் . 


இம்முகாமில் பணியாற்றுபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்களை பதிவேற்றி முடித்துவிட்டால் கூடுதல் படிவம் அனுப்பி வைக்கப்படும் . கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தகுதியுடைய ஒரு நபர்களும் விடுபடக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் . 


இந்நிகழ்வுகளில் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் செல்வி.சு.பவித்ரா , தனித்துணை ஆட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம் ) திருமதி.பெ.இராஜலட்சுமி , உதவி ஆணையர் ( கலால் ) திரு.பா.ராஜவேல் , கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருமதி . அ.மீனா அருள் , சங்கராபுரம் வட்டாட்சியர் திரு.சரவணன் , கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் திரு.சத்தியநாராயணன் , அரசு அலுவலர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வளர்கள் உடனிருந்தனர் .