செய்திகள் :

கள்ளக்குறிச்சி ஏ.எல்.சி. பெதஸ்தா நூற்றாண்டு ஆலய ஆண்கள் ஐக்கிய சங்கத் துவக்க விழா

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஏ.எல்.சி. பெதஸ்தா நூற்றாண்டு ஆலய ஆண்கள் ஐக்கிய சங்கத் துவக்க விழா மத்திய பொருளாளரும் மற்றும் சபை போதகருமான REV.Dr.டி.தங்கதுரை அவர்கள் விழாவினை  ஆசீர்வதித்து துவக்கி வைத்தத்தார். ஆண்கள் ஐக்கிய சங்க செயலாளர் இரா. காபாகாந்தி அவர்கள், அனைவருக்கும் பொன்னாடை அனிவித்து வரவேற்றார்.

பி.சி. செயலாளர் திருமதி. பிரமிளா கீதாமேரி, பி.சி. பொருளாளர் திரு. பி. மோகன் செளந்தராஜன், கன்வினர் திரு. டி.பிரேம்ராஜ், சட்ட ஆலோசகர் ஜார்ஜ் வாஷிங்டன் ஆகியோர்கள் வாழ்த்தி பேசினார்கள். இதில் சிறப்பாக 30-க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மாதந்தோரும் ஆண்கள் ஐக்கிய சங்கக் கூட்டம் நடத்தி சபை வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக விழாவில் தீர்மானிக்கப்பட்டது. விழா முடிவில் பொருளாளர் ஏ.செல்லபாண்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார் விழா சிறப்பாக நடைபெற்றது.